ADDED : ஜூலை 20, 2026 08:03 PM
அ நிறம் | அளவு
திருபுவனை ஜூலை 21- : தனியார் தொழிற்சாலையில், பாய்லர் வெடித்ததில் படுகாயமடைந்த தொழிலாளி சிகிச்சை பலனின்றி இறந்தார்.
ஒடிசாவை சேர்ந்தவஸ் பருன்குமார்தால்,40; இவர், புதுச்சேரி திருபுவனையில் இயங்கி வரும் தனியார் ரசாயன தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். இந்த தொழிற்சாலையில், கடந்த 18ம் தேதி காலை 6:50 மணிக்கு, வெப்பம் தாங்காமல் பாய்லர் வெடித்து சிதறியது.
அதில், அங்கு பணியில் இருந்த பருன்குமார்தால்,45; உடல் கருகி உயிருக்கு போராடினார். அவரை, தீயணைப்பு வீரர்கள் மீட்டு ஜிப்மர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், நேற்று காலை அவர் இறந்தார்.
இதுகுறித்து திருபுவனை போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.
