காரைக்காலில் 27ம் தேதி ஆன்மிக வளர்ச்சி திட்டங்கள் துவக்க விழா கவர்னருக்கு தருமை ஆதீனம் அழைப்பு
காரைக்காலில் 27ம் தேதி ஆன்மிக வளர்ச்சி திட்டங்கள் துவக்க விழா கவர்னருக்கு தருமை ஆதீனம் அழைப்பு
ADDED : ஜூலை 24, 2026 05:31 PM
காரைக்கால்: காரைக்காலில் 27 ம் தேதி நடக்கும் பாரம்பரிய சுகாதார பூங்கா மற்றும் ஆன்மிக வளர்ச்சித்திட்டங்கள் துவக்க விழாவிற்கு கவர்னருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
காரைக்கால் மாவட்டத்தில், திருநள்ளாறு தருமபுரம் ஆதீனம் சார்பில், தன்வந்த்ரா ஒருங்கிணைந்த பாரம்பரிய சுகாதார பூங்கா மற்றும் சமூக நலன், கல்வி மற்றும் ஆன்மிக வளர்ச்சித்திட்ட தொடக்க விழா வரும் 27ம் தேதி நடக்கிறது.
இதில் தருமை ஆதீனம் 27வது குருமகா சந்நிதானம் மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சார்யார் சுவாமிகள் முன்னிலையில் கவர்னர் கைலாஷ்நாதன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, திட்டங்களை துவக்கி வைக்கிறார்.
தருமபுரம் ஆதீனம் உருவாக்கும் தன்வந்த்ரா ஆயுஷ் மருத்துவ ஆராய்ச்சி மையம் மற்றும் மூலிகைப் பண்ணைத் திட்டம் அடிக்கல் நாட்டு விழா, பாரம்பரிய மருத்துவ முறைகள், ஆயுர்வேதம், சித்தா, யோகா மற்றும் இயற்கை மருத்துவம் உட்பட பல சுகாதார சேவைகளை ஒருங்கிணைக்கும் வகையில் உலக தரத்தில் இந்த ஒருங்கிணைந்த பாரம்பரிய சுகாதார பூங்கா உருவாக்கப்படவுள்ளது.
பக்தர்கள் வசதிக்காக ‘தருமை ஸ்டேஸ்’ தங்கும் விடுதி அறைகள் கட்டுமானத்திற்கான பூமி பூஜை, தருமை ஆதீனம் சமஸ்கிருத வகுப்புகள், வேத வகுப்புகள் மற்றும் ஜோதிட வகுப்புகள் துவக்கப்பட உள்ளன.
இளைஞர்களை உயர்கல்வி மற்றும் போட்டித் தேர்வுகளுக்கு தயார்படுத்தும் நோக்கில், சென்னை அறம் ஐ.ஏ.எஸ்,. அகாடமி பங்களிப்புடன் ‘தருமை ஆதீனம் கேரியர் அகாடமி’ துவங்கப்பட உள்ளது.
தருமை ஆதீனம் மலிவு விலை உணவகம் மற்றும் கோசாலை (பசுமடம்) திறப்பு விழாவை முன்னிட்டு தருமை ஆதீனம் சார்பில், கவர்னர் கைலாஷ்நாதனிடம் விழா அழைப்பிதழ் தருமபுர தருமபுர ஆதீன கட்டளை ஸ்ரீமத் சிவகுருநாத தம்பிரான் சுவாமிகள் தலைமையில் வழங்கப்பட்டது.
