ADDED : ஜூலை 24, 2026 05:31 PM
அ நிறம் | அளவு
புதுச்சேரி: ரெட்டியார்பாளையம், சுதாகர் நகர் முத்துமாரியம்மன் கோவிலில், ஆறாம் ஆண்டு ஆடி உற்சவம் நடந்து வருகிறது.
விழா நேற்று முன்தினம், காலை 5:00 மணிக்கு பந்தகால் முகூர்த்தத்துடன் துவங்கியது. தொடர்ந்து, கணபதி பூஜை, மகா சங்கல்பம், அபிேஷக ஆராதனை நடந்தது. நேற்று காலை 6:00 மணிக்கு முத்துமாரியம்மனுக்கு மகா அபிேஷக ஆராதனை, சக்தி கரகம் புறப்பாடு, வீதியுலா நடந்தது.
மதியம் 3:00 மணிக்கு ஊரணி பொங்கல், மாலை 5:00 மணிக்கு கும்பம் படையல், இரவு 7:00 மணிக்கு உற்சவ மூர்த்திகள் வீதியுலா நடந்தது. இன்று காலை 8:30 மணிக்கு மேல் மஞ்சள் நீராட்டு விழா, மாலை ஊஞ்சல் உற்சவம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாக் குழு தலைவர் நடராஜன், செயலாளர் வேலு, பொருளாளர் கண்ணன் உள்ளிட்டோர் செய்து வருகின்றனர்.
