/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
விவசாயிகளின் நண்பனாக அரசு செயல்படுகிறது கவர்னர் கைலாஷ்நாதன் பேச்சு
/
விவசாயிகளின் நண்பனாக அரசு செயல்படுகிறது கவர்னர் கைலாஷ்நாதன் பேச்சு
விவசாயிகளின் நண்பனாக அரசு செயல்படுகிறது கவர்னர் கைலாஷ்நாதன் பேச்சு
விவசாயிகளின் நண்பனாக அரசு செயல்படுகிறது கவர்னர் கைலாஷ்நாதன் பேச்சு
ADDED : பிப் 25, 2025 04:48 AM
புதுச்சேரி: பீகார் பகல்பூரில் பிரதமர் கலந்து கொண்ட விவசாயிகளுக்கான நிதியுதவி வழங்கும் விழாவின் நேரடி ஒளிபரப்பு நிகழ்ச்சியில் கவர்னர் கைலாஷ்நாதன் பேசியதாவது:
பிரதமரின் விவசாயிகள் நிதி உதவித் திட்டத்தின் மூலம் சிறு, குறு விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ. 6,000 நேரடியாக வழங்கப்படுகிறது. இ-நாம் திட்டம் புரட்சியை ஏற்படுத்தி, இடைத்தரகர்கள் இல்லாமல் விவசாயிகள் தங்களுடைய பொருள்களை விற்பனை செய்து லாபம் பெற வைக்கிறது.
விவசாய பொருட்கள் வீணாவதை தடுக்க நாடு முழுதும் விவசாயிகளின் வயல்களில் சேமிப்பு குடோன்களை அரசு நிறுவி வருகிறது. உற்பத்தி அதிகம் ஏற்படும்போது சேமிக்கவும், பிறகு அதை விற்கவும் வழி ஏற்படுகிறது.
தொழில் நுட்பத்தை பயன்படுத்தி உரம் மற்றும் பூச்சு மருந்துகளை டிரோன் மூலம் தெளிக்கவும், உற்பத்தி பொருளை சந்தைக்கு எடுத்துச் செல்லவும் முடிகிறது. விவசாயிகளுக்கு ஓய்வூதியத் திட்டத்தை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.
புதுச்சேரி அரசும், மத்திய அரசின் விவசாய நலத்திட்டங்களை சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. புயல் மற்றும் கனமழை காலத்தில் சேதம் அடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கியும், கூட்டுறவு பயிர் கடன் மற்றும் வட்டியை முழுவதுமாக தள்ளுபடி செய்தும், மாநில விவசாயிகளின் நண்பனாக அரசு செயல்படுகிறது. அரசின் திட்டங்களை விவசாயிகள் முழுமையாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும்' என்றார்.