/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் கவர்னர் தலைமையில் ஆலோசனை
/
சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் கவர்னர் தலைமையில் ஆலோசனை
சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் கவர்னர் தலைமையில் ஆலோசனை
சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் கவர்னர் தலைமையில் ஆலோசனை
ADDED : மே 21, 2024 05:11 AM

புதுச்சேரி: புதுச்சேரியல் குப்பைக் கழிவுகளை முழுமையாக அகற்றி சுகாதாரமான சூழ்நிலையை உருவாக்குவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் கவர்னர் மாளிகையில் நேற்று நடந்தது.
கூட்டத்திற்கு கவர்னர் ராதாகிருஷ்ணன் தலைமை தாங்கினார். சுகாதாரத்துறைச் செயலர் ராஜூ, கவர்னரின் செயலர் நெடுஞ்செழியன், சுகாதாரத்துறை இயக்குநர் ஸ்ரீராமலு, கோரிமேடு நோய்க்கடத்தி ஒழிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் இயக்குனர் மஞ்சு ராஹி, மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் கவர்னர் பேசியதாவது:
மழைக்காலம் தொடங்குவதற்க முன் கழிவுநீர் வாய்க்கால்களில் மருந்து தெளித்து கொசு உற்பத்தியைத் தடுக்க வேண்டும். ட்ரோன் இயந்திரம் உள்ளிட்ட தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி உப்பனாறு உள்பட குறுகலான கழிவுநீர் வாய்க்கால்களில் மருந்து தெளிக்க வேண்டும், டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்கள் கட்டுப்படுத்தும் வழிமுறைகளை மேற்கொள்ள வேண்டும்.
மருத்துவர்கள் சுழற்சி முறையில் கிராமப்புறங்களுக்கு சென்று மக்களின் சுகாதாரமான சூழ்நிலையை கண்காணிக்க வேண்டும். சுகாதாரத்துறை அலுவலர்கள், ஊழியர்களுக்கு சுழற்சி முறையில் பயிற்சி அளிக்க கோரிமேடு நோய்க்கடத்தி ஒழிப்பு மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்துடன் இணைந்து செயல்பட வேண்டும்.
பொதுமக்களுக்கு ஆரோக்கியம் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும், பள்ளி, கல்லுாரி மாணவர்களிடையே துாய்மை மற்றும் சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை எற்படுத்த வேண்டும் என்றார்.

