/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கீழூர் நினைவிடத்தை அழகுபடுத்த கவர்னர் உத்தரவு
/
கீழூர் நினைவிடத்தை அழகுபடுத்த கவர்னர் உத்தரவு
ADDED : ஏப் 03, 2024 07:21 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : ஆயி மண்டபம், கீழூர் நினைவிடத்தை அழகுபடுத்த கவர்னர் ராதாகிருஷ் ணன் உத்தரவிட்டார்.
புதுச்சேரியின் வரலாற்று சிறப்புமிக்க கீழூர் நினைவிடத்தை நேற்று பார்வையிட்ட கவர்னர் ராதாகிருஷ்ணன், நினைவிடத்தை சுற்றுலா துறை மூலம் மேம்படுத்தஅதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தொடர்ந்து, புதுச்சேரி பாரதி பூங்காவில் உள்ள ஆயி மண்டபத்தை பார்வை யிட்ட கவர்னர், அதனை அழகுபடுத்தவும், பூங்கா சூழலை மேம்படுத்திட உத்தரவிட்டார்.
அப்போதுகலைப் பண்பாட்டுத்துறைச் செயலர் நெடுஞ்செழியன், இயக்குனர் கலியபெருமாள், உள்ளாட்சித்துறை இயக்குனர் சக்திவேல், நகராட்சி ஆணையர் கந்தசாமிஉடனிருந்தனர்.

