/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கஞ்சாவை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் கவர்னர் ராதாகிருஷ்ணன் உறுதி
/
கஞ்சாவை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் கவர்னர் ராதாகிருஷ்ணன் உறுதி
கஞ்சாவை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் கவர்னர் ராதாகிருஷ்ணன் உறுதி
கஞ்சாவை ஒழிக்க நடவடிக்கை எடுக்கப்படும் கவர்னர் ராதாகிருஷ்ணன் உறுதி
ADDED : மே 20, 2024 05:17 AM
காரைக்கால் : புதுச்சேரி மாநிலத்தில் முழுமையாக கஞ்சாவை ஒழிக்க புதுச்சேரி முதல்வருடன் இணைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என கவர்னர் ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
திருநள்ளார் சனி பகவான் கோவிலில் தேரோட்ட நிகழ்ச்சியில் பங்கேற்றது பெருமையாக கருதுகிறேன். புதுச்சேரியில் கஞ்சா நடமாட்டம் அதிகமாக இருந்தால் அவற்றை கட்டுபடுத்த கவர்னருக்கு பொறுப்பு இருக்கிறது. எனவே முதல்வரும் நானும் இணைந்து கஞ்சா போதைப் பழக்கத்தை ஒழிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு நீங்கள் எல்லோரும் ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும்.
எத்தனை கிலோ கஞ்சா பிடித்தோம் என்பது அரசிக்கு எதிரானதல்ல எத்தகைய நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பதுதான் அரசின் சீரிய நடவடிக்கையாக இருக்கும். இதை நீங்கள் காவல்துறைக்கு எதிராக பயன்படுத்தக்கூடாது. மாறாக காவல்துறை முயற்சி செய்து கஞ்சாவை பிடித்திருக்கிறார்கள் என்று பாராட்ட வேண்டும். கஞ்சாவை முற்றிலுமாக ஒழிப்போம் நிச்சயமாக ஆந்திராவில் இருந்து வருகின்ற கஞ்சாவை ஒழிப்பதற்கு ஆந்திர தலைவர்களோடு நான் பேசியிருக்கிறேன் .
தேர்தல் முடிவு வந்த பின்பு மிக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும். புதுச்சேரி காரைக்கால் பகுதிகளை துாய்மையாகவும், அழகானதாக எப்படி மாற்றுவது என்பது குறித்து அரசு அதிகாரி மட்டும் முயற்சித்தால் போதாது, பொது மக்களுடைய ஒத்துழைப்பும் மிக மிக அவசியம். மூன்று பேரும் இணைந்து செயல்பட்டால் தான் புதிய புதுச்சேரி மற்றும் காரைக்கலை நம் உருவாக்க முடியும். தேர்தல் விதிகள் உள்ளதால் தேர்தல் முடிந்த பிறகு உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் கல்வி தரத்தை உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும். புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையை போல் காரைக்கால் ஜிப்மர் மருத்துவமனையை வளர்ச்சி அடைய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.

