/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் இம்மாத இறுதியில் பட்ஜெட் தாக்கல் கவர்னர் ராதாகிருஷ்ணன் தகவல்
/
புதுச்சேரியில் இம்மாத இறுதியில் பட்ஜெட் தாக்கல் கவர்னர் ராதாகிருஷ்ணன் தகவல்
புதுச்சேரியில் இம்மாத இறுதியில் பட்ஜெட் தாக்கல் கவர்னர் ராதாகிருஷ்ணன் தகவல்
புதுச்சேரியில் இம்மாத இறுதியில் பட்ஜெட் தாக்கல் கவர்னர் ராதாகிருஷ்ணன் தகவல்
ADDED : ஜூலை 16, 2024 04:59 AM
புதுச்சேரி: காமராஜரின் 122 வது பிறந்த நாளை முன்னிட்டு, ராஜா தியேட்டர் அருகே உள்ள அவரது சிலைக்கு, கவர்னர் ராதாகிருஷ்ணன் நேற்று மாலை அணிவித்து மரியாதை செலுத்திய பின்பு நிருபர்களிடம் கூறியதாவது;
சமுதாய நலன் ஒன்றே சிந்தனையாக கொண்டு வாழ்வது என்பதை உலககிற்கு எடுத்து காட்டியவர் காமராஜர். புதுச்சேரி பட்ஜெட் இந்த முறை சிறப்பாக அமைய பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு இருக்கிறது.
இம்மாத இறுதிக்குள் பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். பட்ஜெட்டிற்கான அனுமதி ஒரிரு நாட்களில் கிடைத்து விடும். எந்தெந்த திட்டங்கள் பாதியில் நிற்கின்றதோ அதற்கு முன்னுரிமை அளித்து திட்டங்கள் நிறைவேற்றப்படும்.
கூடுதல் மத்திய நிதி வேண்டும் என்பதில் மாற்று கருத்து இல்லை. ஆனால், ஒதுக்கப்படும் நிதி விரயம் ஆகாமல் மக்களை சென்று அடைய வேண்டும்.
திருமுருகன் அமைச்சருக்கு துறை ஒதுக்குவது குறித்து இதுவரை முதல்வர் என்னிடம் எதுவும் சொல்லவில்லை.
முதல்வர் விரைவில் துறை ஒதுக்குவார் என நம்புகிறேன். சுத்திகரிப்பு நிலையத்தில் இருந்து துர்நாற்றம் வெளிவந்திருக்கிறது. அதற்குரிய நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பட்டு, மக்களுக்கு உரிய பாதுகாப்பு செய்யப்படும். இதற்கான மாற்று திட்டம் உருவாக்கப்பட்டு உள்ளது.
ரவுடிகளை ஒழிக்க என்கவுண்டர் மட்டும் தீர்வாகாது என்பது வேறு. என்கவுண்டர் வராமல் இருப்பதற்கு என்ன வழி என்று பார்த்தால் ரவுடிகள் உருவாகாமல் இருக்க வேண்டும்.
அதற்கு அடிப்படையாக கட்ட பஞ்சாயத்து இல்லாத சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என பேசினார்.