/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதிய கட்டடத்திற்கு கவர்னர் மாளிகை இடமாறுகிறது கூடுதல் வசதிகளை ஏற்படுத்த ரூ.3.88 கோடி ஒதுக்கீடு
/
புதிய கட்டடத்திற்கு கவர்னர் மாளிகை இடமாறுகிறது கூடுதல் வசதிகளை ஏற்படுத்த ரூ.3.88 கோடி ஒதுக்கீடு
புதிய கட்டடத்திற்கு கவர்னர் மாளிகை இடமாறுகிறது கூடுதல் வசதிகளை ஏற்படுத்த ரூ.3.88 கோடி ஒதுக்கீடு
புதிய கட்டடத்திற்கு கவர்னர் மாளிகை இடமாறுகிறது கூடுதல் வசதிகளை ஏற்படுத்த ரூ.3.88 கோடி ஒதுக்கீடு
ADDED : செப் 16, 2024 05:49 AM

புதுச்சேரி: புதுச்சேரி பழைய சாராய ஆலை வளாகத்தில் உள்ள புதிய கட்டடத்திற்கு கவர்னர் மாளிகை இடம் மாறுகிறது. அங்கு கவர்னர் மாளிகைக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்த ரூ. 3.88 கோடியில் பூமிபூஜை நடந்தது.
புதுச்சேரி பாரதி பூங்கா எதிரே கவர்னர் மாளிகையான ராஜ்நிவாஸ் அமைந்துள்ளது. ராஜ் நிவாஸில் கவர்னர் தங்கும் அறைகள், அலுவலகம், ஆளுநர் செயலகம், அலுவலக ஊழியர்கள் குடியிருப்பு உள்ளிட்டவை செயல்பட்டு வருகிறது. 250 ஆண்டு பழமையான ராஜ் நிவாஸ் கட்டுமானம் தற்போது சேதம் அடைந்து, உறுதிதன்மையை இழந்தது.
இதனால் கவர்னர் மாளிகையை தற்காலிகமாக வேறு இடத்திற்கு இடமாற்றம் செய்ய பொதுப்பணித் துறை அரசுக்கு பரிந்துரை செய்தது, அதை தொடர்ந்து பல்வேறு இடங்கள் கவர்னர் மாளிகையை இடமாற்றம் செய்ய ஆய்வு செய்யப்பட்டு வந்தன. தற்போது பழைய சாராய வடி ஆலை இருந்த இடத்தில் காங்., ஆட்சி காலத்தில் ரூ.13 கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டபட்டுள்ள பொழுது போக்கு இடத்திற்கு ராஜ் நிவாசை மாற்ற முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இங்கு சில அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்தப்பட உள்ளது. இதற்கான பூமி பூஜை நேற்று நடந்தது.
கவர்னர் கைலாஷ்நாதன், முதல்வர் ரங்கசாமி, பொதுப்பணித்துறை அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆகியோர் பூமி பூஜையில் கலந்து கொண்டனர்.
கவர்னரின் செயலர் நெடுஞ்செழியன், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் தீனதயாளன் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
இதுதொடர்பாக அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், பழைய சாராய வடி ஆலை இருந்த கட்டடத்தில் குடும்ப பொழுதுபோக்கு மையம் கட்டப்பட்டது. அங்கு கவர்னர் மாளிகை, அவரது அலுவலகம் இடம் மாறவுள்ளதால் அங்கு அறைகள், தேவையான வசதிகள், மின்வசதி, தரைதளம் அமைக்க ரூ.3.88 கோடியில் பூமிபூஜை நடந்தது.
பொதுப்பணித்துறை சிறப்பு கட்டடங்கள் கோட்டம் 1 வாயிலாக4 மாதங்களில் கட்டி முடிக்கப்படவுள்ளது என்றனர்.