/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கவர்னர் வேண்டுகோள்: எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் ஏற்பு
/
கவர்னர் வேண்டுகோள்: எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் ஏற்பு
கவர்னர் வேண்டுகோள்: எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் ஏற்பு
கவர்னர் வேண்டுகோள்: எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்கள் ஏற்பு
ADDED : ஆக 01, 2024 06:13 AM
புதுச்சேரி: கவர்னரின் வேண்டுகோளை ஏற்று, தி.மு.க., - காங்., எம்.எல்.ஏ.,க்கள் தங்கள் இருக்கையில் அமர்ந்தனர்.
சட்டசபையில் கவர்னர் உரையாற்ற துவங்கியதும், தி.மு.க., - காங்., எம்.எல்.ஏ.,க்கள் எழுந்து பேச துவங்கினர். ஆனால், அவர்களது மைக் அணைக்கப்பட்டு இருந்ததால் அவர்கள் பேசியது யாருக்கும் கேட்கவில்லை.
அப்போது, கவர்னர் ராதாகிருஷ்ணன் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.,க்களை பார்த்து, 'நான் என்ன பேச போகிறேன் என்பதை உன்னிப்பாக கேளுங்கள். எனது உரையை கேட்டுவிட்டு உங்கள் கருத்துகளை கூறுங்கள். அதில் உண்மை இருந்தால் ஆளுங்கட்சியினர் ஏற்றுக் கொள்வர்; தவறு இருந்தால் திருத்தி கொள்ளட்டும். அதுதான் ஜனநாயகமாக இருக்கும். அனைவரும் உட்காருங்கள்' என கேட்டுகொண்டார்.
கவர்னர் கூறியதை ஏற்றுக் கொண்ட காங்., - தி.மு.க., எம்.எல்.ஏ.,க்கள் உடனடியாக தங்கள் இருக்கையில் அமர்ந்து கவர்னர் உரையை கேட்கஆரம்பித்தனர்.