/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கண், மூட்டு பிரச்னையால் மக்கள் அவதி கண்தான விழாவில் கவர்னர் பேச்சு
/
கண், மூட்டு பிரச்னையால் மக்கள் அவதி கண்தான விழாவில் கவர்னர் பேச்சு
கண், மூட்டு பிரச்னையால் மக்கள் அவதி கண்தான விழாவில் கவர்னர் பேச்சு
கண், மூட்டு பிரச்னையால் மக்கள் அவதி கண்தான விழாவில் கவர்னர் பேச்சு
ADDED : செப் 04, 2024 07:07 AM

அரியாங்குப்பம் : '45 வயது முதல், 65 வயது வரையிலான மக்கள் கண் பிரச்னைகள் மற்றும் மூட்டு பிரச்னையால் அவதிப்பட்டு வருகின்றனர்' என, கவர்னர் கைலாஷ்நாதன் பேசினார்.
தவளக்குப்பம் அரவிந்த் கண் மருத்துவமனையில் 39ம் ஆண்டு தேசிய கண்தான இருவார விழிப்புணர்வு விழா மருத்துவமனையில் நடந்தது. அரவிந்த் கண் மருத்துவமனை கண் வங்கி இயக்குனர் ஜோஸ்பின் கிறிஸ்டி வரவேற்றார்.
அரசு செயலர் நெடுஞ்செழியன், கதிர்காமம் இந்திரா காந்தி அரசு மருத்துவக் கல்லுாரியின் கண் மருத்துவத்துறை பேராசிரியர் எழில்வதனி, கண் தான மையத்தின் உதவிப் பேராசிரியர் அமுதா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழாவில் கவர்னர் கைலாஷ்நாதன் பங்கேற்று, கண் தானம் வழங்கல் மற்றும் விழிப்புணர்வு நடவடிக்கைகளில் பங்கேற்ற அரசு மருத்துவமனைகள், தன்னாவலர்கள், தன்னார்வல தொண்டு நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளை சேர்ந்தவர்களுக்கு விருது வழங்கினார்.
கதிர்காமம் இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லுாரி கண் துறையின் மூலம் கடந்தாண்டு 116 பேருக்கு கண்தானம் பெறப்பட்டுள்ளது.
விழாவில் கவர்னர் கைலாஷ்நாதன் பேசுகையில், 'பிரதமர் ஜன் ஆரோக்கிய திட்டம் ஏழை, எளிய மக்களுக்கு சுகாதார உத்தரவாதத்தை அளித்திருக்கிறது. 45 வயது முதல், 65 வயது வரை உள்ளவர்களுக்கு கண், மூட்டு வலி பிரச்னைகளால் அவதிப்பட்டு வருகின்றனர். நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் நோய் குறித்து போதிய விழிப்புணர்வு இல்லாமல் இருக்கிறது.
கண்தானம், மூட்டு மாற்று அறுவை சிகிச்சை வசதிகளும், உறுப்பு தானம் துறையில் உள்ள நவீன வசதிகளும் ஏழைகளுக்கு சென்றடையும் வகையில், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்' என்றார். அரவிந்த் கண் மருத்துவமனை சமுதாய விழிப்புணர்வு திட்ட தலைவர் தயாகர் யாதல்லா, மருத்துவர் குணால் உட்பட பலர் பங்கேற்றனர்.