/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஐ.எப்.இ.டி., பொறியியல் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
/
ஐ.எப்.இ.டி., பொறியியல் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
ஐ.எப்.இ.டி., பொறியியல் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
ஐ.எப்.இ.டி., பொறியியல் கல்லுாரியில் பட்டமளிப்பு விழா
ADDED : ஆக 05, 2024 04:31 AM

புதுச்சேரி: கெங்காராம்பாளையம் ஐ.எப்.இ.டி., பொறியில் கல்லுாரியில் 21வது பட்டமளிப்பு விழா கல்லுாரி வளாகத்தில் நடந்தது.
கல்லுாரி தலைவர் ராஜா தலைமை தாங்கி விழாவினை துவக்கி வைத்தார். கல்லுாரி செயளாலர் சிவராம் ஆல்வா வரவேற்றார். முதல்வர் மகேந்திரன் பட்டமளிப்புப் புள்ளி விபரங்கள் குறித்து பேசினார்.
சிறப்பு விருந்தினராக இந்தியா கேம்பஸ் லீட் எம்பாசிஸ் லிமிடெட் மேலாண் இயக்குனர் ஜோசுவா டேவிட் கலந்து கொண்டு 727 மாணவர்களுக்கு பட்டங்களையும், தரவரிசை பெற்ற 64 மாணவ மாணவியர்களுக்கு பதக்கங்களும், முதலிடம் பெற்ற 34 மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி பேசுகையில், பட்டதாரிகள் தங்கள் பெற்றோரின் தியாகங்களுக்காக நன்றி உள்ளவர்களாக இருக்க வேண்டும், தாங்கள் பயின்ற கல்லுாரிக்கு சென்று மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டும், வளர்ச்சி மனப்பான்மை, நன்றியுணர்வு மற்றும் சமுதாயத்திற்கு சேவை குறித்து பேசினார். விழாவில் பொருளாளர் விமல், அறங்காவலர்கள் முகமது இலியாஸ், முனைவர் சிந்து, அனைத்து துறை தலைவர்கள், பேராசிரியர்கள் மற்றும் அனைத்து மாணவ மாணவியர்களின் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை அறிவியல் மற்றும் மனிதநேயத் துறை டாக்டர் முகமது ஷபிக், தகவல் தொழில்நுட்பத் துறை டாக்டர் சத்தியபாமா ஆகியோர் செய்திருந்தனர். கல்லுாரி துணை முதல்வர் மெட்டில்டா நன்றி கூறினார்.