நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நெட்டப்பாக்கம் : நெட்டப்பாக்கம் அடுத்த கரியமாணிக்கம் கிராமத்தில் உள்ள அங்காளம்மன் கோவில் மயானக் கொள்ளை விழா நேற்று நடந்தது.
விழாவையொட்டி, மதியம் 12:00 மணிக்கு வள்ளாள கண்டன் கோட்டை அழித்தல் நிகழ்ச்சி நடந்தது.
அங்காளம்மன் அலங்கரிக்கப்பட்டு கரியமாணிக் கம் மயானத்திற்கு அழைத்து வரப்பட்டு மதியம் 1:00 மணிக்கு மயானக் கொள்ளை உற்சவம் நடந்தது.
கரியமாணிக்கம், சுற்றியுள்ள கிராம மக்கள் பங்கேற்று தங்களது நிலங்களில் விளைந்த காய், கனிகள் மற்றும் கொழுக்கட்டை போன்றவற்றை கொள்ளைவிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர்.

