/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
போக்குவரத்து சிக்னல்களில் பசுமை பந்தல் அமைப்பு
/
போக்குவரத்து சிக்னல்களில் பசுமை பந்தல் அமைப்பு
ADDED : மே 01, 2024 01:31 AM

புதுச்சேரி, : புதுச்சேரியில் 4 சிக்னல் களில் பொதுப்பணித்துறை சார்பில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியில் கடந்த பிப்., மாதத்தில் இருந்து கடும் வெயில் வாட்டி வதைத்து வருகிறது. காலை 7:00 மணிக்கு வெயில் துவங்கி விடுவதால், சிக்னல்களில் காத்திருக்கும் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். பொதுமக்கள் உச்சி வெயில் நேரத்தில் வீட்டை விட்டு வெளியே வருவதை தவிர்த்தனர்.
சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்தனர். கலெக்டர் குலோத்துங்கன், பொதுப்பணித்துறை, உழவர்கரை நகராட்சி மூலம் பசுமை பந்தல் அமைக்க உத்தரவிட்டார்.
பொதுப்பணித்துறை மத்திய கோட்டம் சார்பில், அஜந்தா சிக்னல், ஒதியஞ்சாலை சிக்னல், ராஜா தியேட்டர் சிக்னல், முருகா தியேட்டர் ராஜிவ் சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்கப்பட்டுள்ளது.
இதுதவிர, பரிச்சார்த்த முறையில் ஒரு சிக்னலில் நிரந்தரமாக நிழல் குடை அமைக்க அரசு திட்டமிட்டுள்ளது.