/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மனைவி இறந்த துக்கம் கணவர் தற்கொலை
/
மனைவி இறந்த துக்கம் கணவர் தற்கொலை
ADDED : பிப் 10, 2025 05:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : மனைவி இறந்த துக்கத்தில், கணவர் துாக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார்.
மூலக்குளம், ஜெ.ஜெ. நகர், 10வது குறுக்கு தெருவை் சேர்ந்தவர் தினகரன், 37; இவரது மனைவி கடந்த 6 ஆண்டிற்கு முன்பு இறந்து விட்டார். அதனால் இவரது 13 மற்றும் 7 வயது இரு மகன்கள் கிருமாம்பாக்கத்தில் உள்ள ஆதரவற்றோர் விடுதியில் தங்கி படித்து வருகிறனர். குடிப்பழக்கத்திற்கு ஆளான தினகரன், மனைவி இறந்த துக்கத்தில் கடும் மன உலைச்சலில் இருந்து வந்தார். நேற்று முன்தினம் மதியம் தனது வீட்டில் துாக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
ரெட்டியார்பாளையம் போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.