ADDED : ஆக 06, 2026 03:30 PM

வில்லியனுார்: பிள்ளையார்குப்பம் கூத்தாண்டவர் கோவிலை சுற்றி தேரோடும் வீதியில் சிமென்ட் சாலை அமைக்கும் பணியை கார்த்திகேயன் எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.
புதுச்சேரி பொதுப்பணித்துறை கட்டடங்கள் மற்றும் சாலைகள் வடக்கு கோட்டம் சார்பில் ரூ.1:15 கோடி திட்ட மதிப்பீட்டில் ஊசுடு தொகுதி பிள்ளையார்குப்பம் கிராமத்தில் உள்ள பிரசித்திபெற்ற கூத்தாண்டவர் கோவிலை சுற்றி தேரோடும் நான்கு மாட வீதிகளில் புதிய சிமென்ட் சாலை அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடந்தது.
நிகழ்ச்சியில் கார்த்திகேயன் எம்.எல்.ஏ., பங்கேற்று பூமி பூஜை செய்து சிமென்ட் சாலை அமைக்கும் பணியை துவக்கிவைத்தார். இந்நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை கட்டடங்கள் மற்றும் சாலைகள் வடக்கு கோட்டம் செயற்பொறியாளர் வைத்தியநாதன், உதவிப்பொறியாளர் ஜலில், இளநிலைப் பொறியாளர்கள் அருண்ஆனந்த் மற்றும் தேவர், காங்., பிரமுகர்கள் மற்றும் கோவில் அறங்காவலர் குழு நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
