ADDED : ஆக 06, 2026 03:30 PM
வில்லியனுார்: வில்லியனுார் தொகுதியில் ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் கல்வீடு கட்டும் திட்ட பயனாளிகளுக்கு தவணை தொகை பெறுவதற்கான ஆணையை ரவிக்குமார் எம்.எல்.ஏ., வழங்கினார்.
புதுச்சேரி ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் 2.0 திட்டத்தின் கீழ் வில்லியனூர் தொகுதிக்குட்பட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த ஆதிதிராவிடர் வகுப்பை சேர்ந்த ஒன்பது பயனாளிகளுக்கு முதல் மற்றும் இரண்டாவது தவணையாக மொத்தம் ரூ.16: 65 லட்சத்திற்கான ஆணை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
நிகழ்ச்சியில் ரவிக்குமார் எம்.எல்.ஏ., பங்கேற்று ஆதிதிராவிடர் பயனாளிகளுக்கு கல்வீடு கட்டுவதற்கு தவணை தொகை பெறுவதற்கான ஆணையை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் புதுச்சேரி ஆதிதிராவிட நலத்துறை இயக்குனர் அர்ஜுன் ராமகிருஷ்ணன், நல ஆய்வாளர் ஜெயலட்சுமி மற்றும் என்.ஆர் காங்., நிர்வாகிகள் மற்றும் கிராம முக்கியஸ்தர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
