/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் தலை துாக்கிய 'குலியன் பாரே சிண்ட்ரோம்' நரம்பு மண்டலத்தை பாதித்து செயலிழக்க செய்யும் நோய்
/
புதுச்சேரியில் தலை துாக்கிய 'குலியன் பாரே சிண்ட்ரோம்' நரம்பு மண்டலத்தை பாதித்து செயலிழக்க செய்யும் நோய்
புதுச்சேரியில் தலை துாக்கிய 'குலியன் பாரே சிண்ட்ரோம்' நரம்பு மண்டலத்தை பாதித்து செயலிழக்க செய்யும் நோய்
புதுச்சேரியில் தலை துாக்கிய 'குலியன் பாரே சிண்ட்ரோம்' நரம்பு மண்டலத்தை பாதித்து செயலிழக்க செய்யும் நோய்
ADDED : பிப் 22, 2025 09:31 PM
வட மாநிலங்களை தொடர்ந்து புதுச்சேரியில் நரம்பு மண்டலத்தை பாதிக்கும் ஜி.பி.எஸ்., என்படும் குலியன் பாரே சிண்ட்ரோம் தலைதுாக்கி இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரி அடுத்த வில்லியனுார் கூடப்பாக்கம் கிராமப்புற பகுதியை சேர்ந்த 8 சிறுவன் தொடர் காய்ச்சல் அடித்தது. கொஞ்சம் நாட்களில் நடக்க முடியாமல் அவதிப்பட்டார். பேனாவை பிடித்து கூட சிறுவனால் எழுத முடியவில்லை.
அதிர்ச்சியடைந்த பெற்றோர் அச்சிறுவனை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதித்தபோது புற நரம்பு மண்டலத்தை பாதிக்கும் குலியன் பாரே சிண்ட்ரோம் நோயால் பாதிக்கப்பட்டது தெரிய வந்தது. தொடர்ந்து 3.5 லட்சம் செலவிட்டு சிறுவனின் உயிரை காப்பாற்றினர். இந்த நோய்க்கான ஒரு ஊசியின் விலை 1.5 லட்சம் ரூபாய்.
வட மாநிலங்களில் இந்த குலியன் பாரி சிண்ட்ரோமா பாதிப்பு அதிகமாக இருந்தது. குறிப்பாக புனேவில் 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர். இரண்டு பேர் உயிரிழந்தனர். வட மாநிலத்தை தொடர்ந்து புதுச்சேரி சிறுவனுக்கு குலியன் பாரே சிண்ட்ரோம் பாதிப்பு ஏற்பட்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குலியன் பாரே சிண்ட்ரோம் என்பது தொற்றுநோயா, இதனால் உயிருக்கு ஆபத்தா, அறிகுறிகள் எப்படியிருக்கும் உள்ளிட்ட பல்வேறு விஷயங்களை நரம்பியல் மருத்துவர்களிடம் எழுப்பியபோது....
குலியன் பாடி சிண்ட்ரோம், இது மிக மோசமான நோய். இந்த நோய் குழந்தை முதல் பெரியவர்கள் வரை யாருக்கு வேண்டுமானாலும் வரும். இந்த நோயின் தாக்கம் முதுகுத் தண்டில் ஏற்படக்கூடியது, முதுகுத் தண்டிலிருந்து கை, கால்களுக்குச் செல்லும் நரம்புகளை ஒவ்வொன்றாக இந்த நோய் செயலிழக்கச் செய்யும். இந்த நோய் வர முக்கியக் காரணம் நம் உடம்பில் இருக்கும் நோய் எதிர்ப்புச்சக்தி நோய் வராமல் தடுக்கக்கூடிய ஹீமோகுளோபின், ரிவேர்ஸ்ஸாகச் செயல்படத் தொடங்கிவிடும். அதாவது, நோயை உண்டாக்கக்கூடிய ஹீமோகுளோபினாக மாறிவிடும். அப்படி வரும் நோய்தான் குலியன் பாடி சிண்ட்ரோம்.
பாதிப்பு தீவிரமாகும்போது மூச்சு விடுவதில் சிரமம் ஏற்படும். மூச்சுக்குழாய் நரம்புகள் பாதிக்கப்படுவதால் இது ஏற்படுகிறது. அதே போல இதயத்தில் உள்ள நரம்புகளை பாதிக்கும்போது ரத்த அழுத்தம் அளவுக்கு அதிகமாக அதிகரிக்கவும், மிகவும் குறைந்தும் போகலாம். இதுபோன்ற உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய அறிகுறிகளையும் ஏற்படுத்தும். எளிதில் பிரச்னையைக் கண்டறிந்தால்தான் சிகிச்சையையும் விரைவாகத் தொடங்க முடியும்.
ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சையைத் தொடங்கிவிட்டால் எளிதில் குணப்படுத்திவிடலாம். சுத்தமான குடிநீர், சுகாதாரமான உணவை எடுத்துக்கொள்ள வேண்டும். நோய் எதிர்ப்புத் திறனைக் குறைக்க 'இம்யூனோகுளோபுலின்' என்ற ஊசி கொடுக்கப்படும்.
அடுத்ததாக உடலில் உள்ள தட்டணுக்களை மாற்றும் சிகிச்சை, தீவிர பாதிப்புகள் ஏற்பட்டு மூச்சு விடுதலில் சிரமம் உள்ளவர்களுக்கு வென்டிலேட்டர் உதவியுடன் செயற்கை சுவாசம் கொடுக்கப்படும்.
இறுதிகட்ட அறிகுறிகள் உள்ளவர்களைக்கூட இந்தச் சிகிச்சையினால் காப்பாற்ற வாய்ப்பு அதிகமாக உள்ளது. ஆரம்ப கட்டத்திலேயே சிகிச்சையைத் தொடங்கிவிட்டால் எளிதில் குணப்படுத்திவிடலாம். இல்லையெனில் உயிரிழப்பில் முடியும்' என்றனர்.

