/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
ஜிம் பயிற்சியாளர் கொலையில் 3 ரவுடிகள் மீது குண்டாஸ்
/
ஜிம் பயிற்சியாளர் கொலையில் 3 ரவுடிகள் மீது குண்டாஸ்
ஜிம் பயிற்சியாளர் கொலையில் 3 ரவுடிகள் மீது குண்டாஸ்
ஜிம் பயிற்சியாளர் கொலையில் 3 ரவுடிகள் மீது குண்டாஸ்
ADDED : ஆக 27, 2024 04:16 AM

புதுச்சேரி, : ஜிம் பயிற்சியாளரை கல்லால் தாக்கி கொலை செய்த மூன்று ரவுடிகள் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது.
புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் தெப்பக்குளம் வீதியைச் சேர்ந்தவர் மணிகண்டன்,32; ஜிம் பயிற்சியாளர். இவர் கடந்த மே 29ம் தேதி உப்பளம் இந்திரா காந்தி விளையாட்டு அரங்கத்தின் பின்னால் சென்றபோது, அங்கு மது அருந்தி கொண்டிருந்த நான்கு பேர் கொண்ட கும்பல் தகராறு செய்து, மணிகண்டனை கல்லால் தாக்கி கொலை செய்தது.
இதுதொடர்பாக ஒதியஞ்சாலை போலீசார் வழக்கு பதிந்து, வம்பாகீரப்பாளையம் அசோக்,28; திப்புராயப்பேட்டை கார்த்திகேயன்,27; ஸ்ரீகாந்த்,19; உள்ளிட்ட 4பேரை கைது செய்தனர்.
அவர்களில் அசோக் மீது 5 வழக்குகளும், கார்த்திகேயன் மீது 3 வழக்குகளும், ஸ்ரீகாந்த் மீது 2 வழக்குகள் உள்ளது.
அதனையொட்டி மூவரையும் கலெக்டர் உத்தரவின் பேரில், ஓதியஞ்சாலை போலீசார் குண்டார் தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து, இதற்கான் உத்தரவை மூவரிடம் நேற்று வழங்கினர்.

