/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சித்தானந்த சுவாமி கோவிலில் குரு பெயர்ச்சி விழா
/
சித்தானந்த சுவாமி கோவிலில் குரு பெயர்ச்சி விழா
ADDED : மே 02, 2024 01:06 AM

புதுச்சேரி : கருவடிக்குப்பம் சித்தானந்த சுவாமி கோவிலில் குரு பெயர்ச்சி விழா நேற்று நடந்தது.
குரு பகவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சியடைவதை முன்னிட்டு, கருவடிக்குப்பம் சித்தானந்த சுவாமி கோவிலில் நேற்று காலை கலச பிரதிஷ்டை நடந்தது. அதைத் தொடர்ந்து, மாலை 3:00 மணிக்கு கணபதி ஹோமத்துடன் பூஜைகள் நடந்தது.
மாலை 4:00 மணிக்கு, குரு பவானுக்கு, பால், தயிர், நெய், பழம், விபூதி, சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் மகா அபிேஷகம் நடந்தது. குரு பவான் மேஷ ராசியில் இருந்து ரிஷப ராசிக்கு பெயர்ச்சியான மாலை 5:19 மணிக்கு மகா தீபாராதனை நடந்தது.
விழாவில் குடிமைப்பொருள் வழங்கல் துறை அமைச்சர் சாய் சரவணன்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் இளங்கோவன் மற்றும் நிர்வாகிகள், கோவில் குருக்கள் தேவசேனாபதி உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

