ADDED : ஜூலை 23, 2026 08:01 PM
நெட்டப்பாக்கம்: பிறந்தநாள் விழா கொண்டாடிய அமைச்சர் ராஜவேலுக்கு அரியாங்குப்பம் தொகுதி பா.ஜ., பொறுப்பாளர் சிவக்கொழுந்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.
நெட்டப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ.,வும் அமைச்சருமான ராஜவேலு பிறந்தநாள் விழா கரியமாணிக்கம் தனியார் திருமண நிலையத்தில் கொண்டாடப்பட்டது.
விழாவில், அரியாங்குப்பம் தொகுதி பா.ஜ., பொறுப்பாளர் சிவக்கொழுந்து, அமைச்சர் ராஜவேலுக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார். விழாவில் என்.ஆர்.காங்., பிரமுகர் பத்மகுமார், பா.ம.க., தொகுதி தலைவர் காந்தி, ஊர் முக்கியஸ்தர்கள் ராஜசுந்தரம், முத்து, என்.ஆர்.காங்., நிர்வாகிகள் சிலம்பரசன், ஜெயக்குமார், விசு, பா.ஜ., நிர்வாகிகள் ஞானப்பிரகாசம், வழக்கறிஞர் இளமாறன், மணக்குள பில்லடர்ஸ் நிறுவனர் புவேனேஸ்வர் ஆகியோர் வாழ்த்து தெரிவித்தார்.
