தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ பாதயாத்திரை செல்வோருக்கு தொப்பி வழங்கல்

பாதயாத்திரை செல்வோருக்கு தொப்பி வழங்கல்

பாதயாத்திரை செல்வோருக்கு தொப்பி வழங்கல்


ADDED : ஆக 25, 2024 05:54 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 25, 2024 05:54 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: அரியாங்குப்பம் பகுதியில், வேளாங்கண்ணிக்கு பாதயாத்திரை செல்பவர்களுக்கு தொப்பி மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டன.

வேளாங்கண்ணி, அன்னை மாதா கோவில் கொடியேற்றம் வரும், 29ம் தேதி நடக்கிறது. இதில் பங்கேற்பதற்காக, தமிழகம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமானோர், பாதயாத்திரையாக கோவிலுக்கு நடந்து செல்கின்றனர்.

இந்நிலையில், அரியாங்குப்பம் அரசு உயர்நிலைப்பள்ளி முன்னாள் மாணவர்கள் சங்க தலைவர் நாராயணகுமார் தலைமையில், பாத யாத்திரை செல்பவர்களுக்கு தொப்பி மற்றும் குளிர்பானங்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் சங்க செயலாளர் பிரபு, பொருளாளர் ராபர்ட் கென்னடி, பொறுப்பாளர்கள் சுகுமாரன், டேவிட் ஜோசப், முருகானந்தம், சந்தானம் உட்பட பலர் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us