தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ வயிற்று போக்கை நிறுத்துவோம் திட்டம் சுகாதாரத்துறை துவக்கம்

வயிற்று போக்கை நிறுத்துவோம் திட்டம் சுகாதாரத்துறை துவக்கம்

வயிற்று போக்கை நிறுத்துவோம் திட்டம் சுகாதாரத்துறை துவக்கம்


ADDED : ஜூலை 07, 2026 06:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 07, 2026 06:52 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

புதுச்சேரி: திப்புராயபேட்டை, நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் வயிற்று போக்கை நிறுத்துவோம் திட்டம் துவக்க நிகழ்ச்சி நேற்று நடந்தது.

மத்திய அரசின் சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி புதுச்சேரி சுகாதார துறை சார்பில், ஜூன் 15 முதல் ஜூலை 31ம் தேதி வரை வயிற்று போக்கை நிறுத்துவோம் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.

அதன்படி, திப்புராயபேட்டை, நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் நடந்த திட்டம் துவக்க விழாவில், சுகாதாரத்துறை இயக்குநர் செவ்வேள் துவக்கி வைத்து, திட்டத்தின் நோக்கத்தை எடுத்துரைத்தார். துணை இயக்குநர்கள் சமீமுனிசா பேகம், ரகுநாதன், குழந்தை சுகாதார மேலாளர் ஆனந்தலட்சுமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ராஜிவ் காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையின் குழந்தை பிரிவு அதிகாரி அனுராதா, முகந்தன், கமல்ராஜ், மகளிர் மற்றும் குழந்தைகள் நலத்துறை டாக்டர் பாலாஜி மற்றும் தனியார் கல்லுாரிகளைச் சேர்ந்த ஒருங்கிணைப்பு அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.

ஏற்பாடுகளை திப்புராயபேட்டை டாக்டர்கள் மணிசுடர், ஜமுனா, ரமாதேவி, சுகாதார செவிலியர் அதிகாரி வரகலட்சுமி, துணை செவிலியர்கள் ஊழியர்கள் செய்திருந்தனர். 

விழாவில், சுகாதாரத்துறை இயக்குனர் செவ்வேள் பேசுகையில், வயிற்று போக்கினால் ஏற்படும் இறப்புகள் பொதுவாக கோடை மற்றும் பருவ மழை காலங்களில் ஏற்படுகிறது. அதனை ஓ.ஆர்.எஸ். கரைச்சல் அளித்தல், குழந்தைகளுக்கு துத்தநாக மாத்திரை மற்றும் ஊட்டச்சத்து வழங்குவதன் மூலம் தவிர்க்கலாம். சுத்தமான குடிநீர், கை கழுவுதல், சுற்றுப்புற சுகாதாரம், தடுப்பூசி எடுத்துக் கொள்ளுதல் மூலமாகவும் வயிற்றுப் போக்கை தடுக்கலாம்’ என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us