ADDED : பிப் 28, 2025 04:45 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு 'மாபெரும் சுகாதார திருவிழா'சிறப்பு மருத்துவ முகாம், கண்காட்சி இன்று துவங்கி 3 நாட்காள் நடக்கிறது.
கருவடிக்குப்பம் காமராஜர் மணி மண்டபத்தில்,இன்று (28ம் தேதி) மதியம் 2:00 மணிக்கு, சுகாதார திருவிழாவை கவர்னர் கைலாஷநாதன் துவங்கி வைக்கிறார். முதல்வர் ரங்கசாமி தலைமை தாங்குகிறார். சபாநாயகர் செல்வம் முன்னிலை வகிக்கிறார். ஜான்குமார் எம்.எல்.ஏ., உள்ளிட்ட பலர் கலந்துகொள்கின்றனர்.
மதியம்3:00 மணி முதல் இரவு 9:00மணி வரை நடக்கும் சுகாதார திருவிழாவில், பொது சுகாதார சேவைகள், வாய், மார்பக, கர்ப்பவாய் புற்றுநோய் பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகள், நீரிழிவு, ரத்த அழுத்தம், ரத்த பரிசோதனைகள், கண், காது, மூக்கு, தொண்டை, மனநலம் மற்றும் குழந்தைகளுக்கான உடல் நல ஆலோசனைகள், இருதயம், நுரையீரல், நரம்பியல், சிறுநீரக நோய்க்கான பரிசோதனைகள் மற்றும் ஆலோசனைகள்,அந்தந்த துறை சார்ந்த சிறப்பு நிபுணர்களால் இலவசமாக வழங்கப்பட உள்ளது.
மேலும், சுகாதார கண்காட்சி, ஆயுஷ் மற்றும் யோகா உடற்பயிற்சி முறைகள், ஆரோக்கிய உணவு திருவிழா போன்றவை இடம் பெற உள்ளன.ஏற்பாடுகளை, சுகாதாரத்துறை இயக்குனர் ரவிச்சந்திரன் தலைமையில் துறை ஊழியர்கள்செய்து வருகின்றனர். இதில், பொதுமக்கள் பங்கேற்று, அனைத்து மருத்துவ சேவைகளையும் இலவசமாக பெற்று பயன்பெறலாம்.

