/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுகாதார ஊழியர் சம்மேளனம் செவிலியர் தின வாழ்த்து
/
சுகாதார ஊழியர் சம்மேளனம் செவிலியர் தின வாழ்த்து
ADDED : மே 12, 2024 05:12 AM
புதுச்சேரி: சுகாதார ஊழியர் சம்மேளனம் செவிலியர் தின வாழ்த்து தெரிவித்துள்ளது.
சம்மேளன தலைவர் முனுசாமி விடுத்துள்ள வாழ்த்து செய்தி:
மக்கள் தொகைக்கு ஏற்ப அரசு சுகாதார கட்டமைப்பை உருவாக்குவது வரவேற்கத்தக்கது. மத்திய அரசு தொழுநோய், காசநோய் உள்ளிட்ட நோய்களை ஒழிக்கும் வகையில் தேசிய அளவில் சுகாதார திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
தற்போதுள்ள காலி பணியிடங்களை நிரப்பாத நிலையில், பணியில் உள்ள செவிலிய அதிகாரிகள் பணிச்சுமை காரணமாக மன அழுத்தம் மற்றும் மன உளைச்சலுடன் பணிபுரிகின்றனர். அவர்கள் சேவை மனப்பான்மையுடன் பணி செய்து வருகின்றனர்.
தாய் உள்ளம் கொண்ட செவிலியர்களின் சேவைக்கு இணை எதுவும் கிடையாது. சேவை மனப்பான்மையுடன், பணி செய்யும் அனைத்து செவலியர்களுக்கும் செவிலியர் தின வாழ்த்துகள். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.