ADDED : ஏப் 08, 2024 05:32 AM

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலை.,யில் ராமாயணத்தை இழிவாக சித்தரித்து நாடகம் அரங்கேற்றியவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இந்து முன்னணி இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி பல்கலை.,யில் மாணவர்கள் சிலர், ராமபிரானின் வாழ்க்கை வரலாற்று கதையான, ராமாயணத்தை இழிவாக சித்தரித்து நாடகமாக அரங்கேற்றியதற்கு, பல்வேறு தரப்பினர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில், புதுச்சேரி, காமராஜர் சாலையில், இந்து முன்னணி இயக்கத்தின் சார்பில், கலவரத்தை துாண்டும் விதமாக, இந்துக்களின் மத உணர்வுகள் புண்படும் வகையில், அவதுாறு பரப்பியவர்களை கண்டித்தும், அதற்கு உடந்தையாக செயல்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், இந்து முன்னணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மணிவண்ணன் வரவேற்றார். செந்தில் தலைமை தாங்கினார். நாகராஜ், செந்தில், மணி வீரப்பன், சிவமுத்து, தியாகு, நாராயணன், கிருஷ்ணராஜ், ஜெயக்குமார் முன்னிலை வகித்தனர். சனில்குமார் சிறப்புரையாற்றினார். செல்வம் நன்றி கூறினார்.
ஆர்ப்பாட்டத்தில், மாணவர்கள் மற்றும் பேராசிரியர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்பட்டது. இந்து முன்னணி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

