ADDED : ஜூலை 19, 2026 05:22 PM
புதுச்சேரி: புதுச்சேரி இந்து முன்னணி சார்பில், 12 ஜோதிர் லிங்கங்கள் தரிசன விழா நடத்துவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம், பத்மினி மஹாலில் நடந்தது.
கூட்டத்தில், தென்பாரத அமைப்பாளர் பக்தன், முன்னாள் சபாநாயகர் செல்வம், தமிழக பொதுச் செயலாளர் மணலி மனோகர், புதுச்சேரி மாநில தலைவர் சனில்குமார் உள்ளிட்ட இந்து அமைப்புகள், பல்வேறு ஆன்மிக இயக்க நிர்வாகிகள் மற்றும் சிவனடியார்கள் கலந்து கொண்டனர்.
இதில், வீரத்துறவி ராமகோபாலனின், திருச்சிராப்பள்ளி சீரா தோப்பு குருகுலத்தில் உள்ள மணிமண்டபத்தில் 12 ஜோதிர் லிங்கங்கள் பிரதிஷ்டை செய்யப்பட உள்ளன. அந்த 12 ஜோதிர் லிங்கங்கள் புதுச்சேரியில் அடுத்த (ஆகஸ்ட்) மாதம் 13, 14, 15 ஆகிய தேதிகளில் பக்தர்கள் தரிசனத்திற்காக இ.சி.ஆர். விவேகானந்தா உயர்நிலைப் பள்ளியில் விழா நடத்துவது குறித்து முடிவு செய்யப்பட்டது.
