/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புனித ஆரோக்கிய அன்னை ஆலய தேர்பவனி
/
புனித ஆரோக்கிய அன்னை ஆலய தேர்பவனி
ADDED : ஆக 17, 2024 02:48 AM

புதுச்சேரி: புனித ஆரோக்கிய அன்னை ஆலய 10ம் ஆண்டு திருவிழாவையொட்டி தேர்பவனி நடந்தது.
உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட கண்டாக்டர் தோட்டம், பிரியதர்ஷினி நகர் பகுதியில் அமைந்துள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆலய 10ம் ஆண்டு திருவிழா நடந்தது. மதியம் 12:00 மணிக்கு அன்னதானம், மாலை 6:00 மணிக்கு கொடியேற்றம், இரவு 7:00 மணிக்கு தேர்பவனி நடந்தது.
தேர்பவனி பவனியை தி.மு.க.., தலைமை பொதுக்குழு உறுப்பினர் கோபால் துவக்கி வைத்தார். தொகுதி செயலாளர் சக்திவேல், வர்த்தக அணி நிர்வாகிகள் குரு, பாபு, ரவி, பொருளாளர் சசிகுமார், கிளை செயலாளர்கள் அகிலன், பிரகாஷ், பொறியாளர் அணி நிர்வாகி அர்ஜூன், ஆரி, சீனு, விக்கி, சவுரி, கபாலி, தமிழ்ச்செல்வன், பிரித்திவிராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
ஏற்பாடுகளை தண்டபாணி, சேகர் செய்திருந்தனர்.

