தோட்டக்கலைப் பயிர் சாகுபடி மானியம் விவசாயிகள் பட்டியல் சமுதாய தணிக்கை
தோட்டக்கலைப் பயிர் சாகுபடி மானியம் விவசாயிகள் பட்டியல் சமுதாய தணிக்கை
ADDED : ஜூலை 24, 2026 07:43 PM
புதுச்சேரி: தோட்டக்கலைப் பயிர் சாகுபடி செய்து, மானியத்திற்கு விண்ணப்பித்த விவசாயிகளின் பெயர் பட்டியல், சமுதாய தணிக்கை செய்வதற்காக, உழவர் உதவியகங்களில் ஒட்டப்பட்டுள்ளது.
இது குறித்து இணை வேளாண் இயக்குனர் சண்முகவேலு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு;
புதுச்சேரி அரசு, வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை, தோட்டக்கலை அலுவலகம் மற்றும் புதுச்சேரி மாநில தோட்டக்கலை வளர்ச்சி சங்கம் வாயிலாக புதிய பழத் தோட்டம் அமைத்தல், பாரம்பரிய மலர்கள், கட்டை வாழை, மஞ்சள், வெங்காயம், வீரிய ஒட்டு ரக காய்கறிகள் பயிர் செய்வோர், மூடாக்குகள் போன்றவைகளை சாகுபடி செய்யும், செயல்படுத்தும் விவசாயிகளுக்கு வருடந்தோறும், பயிர் சாகுபடிக்கு பிந்தைய மானியத்தொகை அவர்தம் வங்கிக்கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது.
இந்த வருடம் தை பட்டம் 2026ல் தோட்டக்கலைப் பயிர் சாகுபடி செய்து விண்ணப்பித்த விவசாயிகளின் பெயர் பட்டியல், சமுதாய தணிக்கை செய்வதற்காக, புதுவை பிராந்தியத்தின் சம்பந்தப்பட்ட உழவர் உதவியகங்களின் அறிவிப்பு பலகையில் நேற்று 24ம் தேதி முதல் முதல் வரும் 3ம் தேதி வரை வரை ஒட்டப்பட்டுள்ளது.
மேலும், வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை இணையதளத்திலும் (https://agri.py.gov.in) வெளியிடப்பட்டுள்ளது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம். இப்பட்டியலில் ஆட்சேபனை ஏதேனும் இருப்பின் வரும் 3ம் தேதிக்குள் புதுச்சேரி தாவரவியல் பூங்காவில் உள்ள கூடுதல் வேளாண் இயக்குனர் (தோட்டக்கலை) அலுவலகத்தில் எழுத்து பூர்வமாக தெரிவிக்கலாம். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.
