/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
மருத்துவமனை ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
/
மருத்துவமனை ஒப்பந்த ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஆக 20, 2024 05:15 AM
புதுச்சேரி: ராஜிவ்காந்தி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் ஒப்பந்த ஊழியர்கள் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுச்சேரி ராஜிவ்காந்தி அரசு மகளிர் மற்றும் குழந்தைகள் மருத்துவமனையில் ஒப்பந்த ஊழியர்கள் பணி செய்து வருகின்றனர். ஊழியர்கள் நேற்று ஒரு மணிநேரம் பணியை புறக்கணித்து மருத்துவமனை வாயிலில் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதில், ஒப்பந்த ஊழியர்களுக்கு கடந்த 2023ம் ஆண்டு சம்பள உயர்வு மற்றும் நிலுவை தொகையுடன் வழங்க வேண்டும். 2021ம் ஆண்டு ஏப்ரல் முதல் கொடுக்க வேண்டிய பஞ்சப்படி தொகையை நிலுவை தொகையுடன் வழங்க வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தப்பட்டது.
நாளை மற்றும் நாளை மறுநாள் ஒரு மணி நேரம் பணியை புறக்கணித்து ஆர்ப்பாட்டம் செய்ய போவதாக அறிவித்துள் ளனர்.