/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை
/
வீட்டின் கதவை உடைத்து நகை, பணம் கொள்ளை
ADDED : பிப் 28, 2025 04:54 AM

வில்லியனுார்: வில்லியனுார் அருகே வீட்டின் கதவை உடைத்து மர்ம நபர்கள் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றனர்.
வில்லியனுார் அடுத்த பிள்ளையார்குப்பத்தை சேர்ந்தவர் கோதண்டபாணி, 70; விவசாயி. இவரது மனைவி சரசு,65; இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். அவர்கள், திருமணமாகி அதே கிராமத்தில் தனித்தனியே வசித்து வருகின்றனர்.
கோதண்டபாணி-சரசு தம்பதி தனியாக வசித்து வருகின்றனர். இவர்கள், வீட்டில் ஒரு பெட்டி கடையும் நடத்தி வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு, வழக்கம்போல் வீட்டை பூட்டிவிட்டு, கடையின் அருகே இருவரும் உறங்கினர். நேற்று அதிகாலை எழுந்து, வீட்டை திறந்து சென்று பார்த்தபோது, பின்பக்க கதவு திறக்கப்பட்டு, பொருட்கள் சிதறி கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
உள்ளே அறையில் இருந்த இரும்பு பீரோ உடைக்கப்பட்டு, அதில் வைத்திருந்த ரூ.1.50 லட்சம் ரொக்கம், 6 சவரன் நகை திருடு போயுள்ளதை கண்டு கதறி அழுதனர்.
புகாரின் பேரில் வில்லியனுார் இன்ஸ்பெக்டர் ஆறுமுகம், சப்- இன்ஸ்பெக்டர் சரண்யா மற்றும் போலீசார், சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். தொடர்ந்து, தடவியல் நிபு ணர்கள் மூலம் தடயங்களை சேகரித்தனர். இது குறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.