/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
வீடு கட்டும் திட்ட நிதி சிவா எம்.எல்.ஏ., வழங்கல்
/
வீடு கட்டும் திட்ட நிதி சிவா எம்.எல்.ஏ., வழங்கல்
ADDED : ஜூன் 27, 2024 02:55 AM

வில்லியனுார்: வில்லியனுார் தொகுதி குடிசை மாற்று வாரியம் சார்பில் இலவச வீடுகட்டும் திட்ட பயனாளிகளுக்கு இரண்டாம்தவணையை எதிர்கட்சித் தலைவர் சிவா வழங்கினார்.
புதுச்சேரி குடிசை மாற்று வாரியம் சார்பில் இலவச கல்வீடு கட்டும் திட்டத்தின் கீழ் வில்லியனுார் தொகுதியைச் சேர்ந்த 86பயனாளிகளுக்குஇரண்டாம்தவணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
எதிர்க்கட்சித் தலைவர் சிவா பயனாளிகளுக்கு கல்வீடு கட்டுவதற்கான இரண்டாம்தவணை ரூ. 1.60 லட்சம் வீதம் 86 பயனாளிளுக்கு 1.37 கோடி ரூபாய்க்கான ஆணையை பயனாளிகளிடம் வழங்கினார்.
நிகழ்ச்சியில் குடிசை மாற்று வாரிய இளநிலைப் பொறியாளர் அனில்குமார், ஏரியா இன்ஸ்பெக்டர் இளங்கோ,தி.மு.க., நிர்வாகிகள் செல்வநாதன், மணிகண்டன்உட்பட பலர் பங்கேற்றனர்.