ADDED : மே 03, 2026 10:04 PM
அ நிறம் | அளவு
காரைக்கால்: காரைக்காலில் மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கணவர் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
காரைக்கால், கோட்டுச்சேரி, கீழகாசாகுடி, வள்ளியம்மை நகரை சேர்ந்தவர் முருகவேல், 50; பெயிண்டர். இவரது மனைவி ராஜேஸ்வரி. முருகவேல் கடந்த சில நாட்களாக சரியாக வேலைக்கு செல்லாமல் அளவுக்கு அதிகமாக மது குடித்து வந்தார். இதனால் கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டது.
இந்நிலையில் ராஜேஸ்வரி கோபித்துக் கொண்டு வெளியே சென்றார். இதில், மனமுடைந்த முருகவேல் துாக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். புகாரின் பேரில், கோட்டுச்சேரி போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
