ADDED : செப் 10, 2024 06:47 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம் : பூரணாங்குப்பம் அரசு நடுநிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு தனசுந்தராபாள் சாரிடபிள் சொசைட்டி சார்பில், மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
தலைமை ஆசிரியர் சகாயமேரி தலைமை தாங்கினார். ஆசிரியை ராஜலட்சுமி வரவேற்றார். தனசுந்தராபாள் சாரிடபுள் சொசைட்டி நிறுவனர் ஆனந்தன், சிறப்பு விருந்தினராக பங்கேற்று மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கினார். நிகழ்ச்சியில், பிரசாந்த், வண்டி முத்து, பள்ளி பெற்றோர் குழு உறுப்பினர் பாலச்சந்தர், சிவச்சந்திரன், சதீஷ், பள்ளி ஆசிரியர் அரவிந்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

