/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
பேனர் மீது கை வைத்தால் கையை உடைப்போம்: அதிகாரிகளுக்கு மிரட்டல் விடுத்து பேனர்

ADDED : செப் 15, 2024 07:18 AM

புதுச்சேரியில் பேனர் வைக்க தடை உள்ளது. தடையை மீறி பேனர் வைப்பதை புதுச்சேரி நீதிமன்றம் கண்டித்ததுடன், நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என எச்சரிக்கை செய்ததால், நகர பகுதியில் உள்ள பேனர்கள் அகற்றப்பட்டது.
அதன்பிறகும் ஆங்காங்கே திருமணம், காது குத்துதல், வளைகாப்பு, பிறந்த நாள் விழா என பேனர் வைத்து வருகின்றனர். அதிகாரிகள் பேனர்களை அகற்றி வருகின்றனர். இந்த நிலையில், காரைக்காலில் பேனர்களை அகற்றும் அதிகாரிகளை மிரட்டும் வகையில் வைத்துள்ள பேனர் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. காரைக்கால் கீழகாசாக்குடிமேடு மீனவ கிராமத்தில் உள்ள ரேணுகாதேவி அம்மன் கோவில் ஆண்டு திருவிழாவுக்காக, அப்பகுதியில் வசிக்கும் சிறுவர் உட்பட 4 வாலிபர்கள் சேர்ந்து வரவேற்பு டிஜிட்டல் பேனர் வைத்துள்ளனர்.
அதில், ரக்கர்ட் பாய்ஸ் என்ற பெயரில் 4 பேரின் புகைப்படங்களும், கட் அவுட் மீது கை வைச்சா கையை ஒடுச்சிடுவேன் என மிரட்டும் வசனங்களுடன் பேனர் வைக்கப்பட்டுள்ளது. பேனர் வைப்பது குற்றம். அதிலும், அதிகாரிகளை மிரட்டும் தோரணையில் பேனர் வைத்துள்ளது காரைக்காலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.