/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கேட்டரிங் படித்தால் வேலை நிச்சயம்: பேராசிரியர் சுரேஷ்குமார் உறுதி
/
கேட்டரிங் படித்தால் வேலை நிச்சயம்: பேராசிரியர் சுரேஷ்குமார் உறுதி
கேட்டரிங் படித்தால் வேலை நிச்சயம்: பேராசிரியர் சுரேஷ்குமார் உறுதி
கேட்டரிங் படித்தால் வேலை நிச்சயம்: பேராசிரியர் சுரேஷ்குமார் உறுதி
ADDED : மார் 30, 2024 07:03 AM

புதுச்சேரி: மரைன் கேட்ரிங் துறையை தேர்வு செய்தால், படிப்பு முடித்து வெளியே வரும்போது வேலை வாய்ப்புடன் வரலாம் என பேராசிரியர் சுரேஷ்குமார் பேசினார்.
'தினமலர்' வழிகாட்டி நிகழ்ச்சியில், மரைன் கேட்டரிங் ஓட்டல் மேலாண்மை படிப்புகள் குறித்து, எஸ்.எல்.சி.எஸ்., கல்லுாரி பேராசிரியர் சுரேஷ்குமார் பேசியதாவது;
எல்லா படிப்புகளும் நல்ல படிப்புகள் தான். எந்த படிப்பு எடுத்தாலும், அதில் நம் திறமையை வளர்த்து கொண்டு வேலை வாய்ப்பு பெறுவதே முக்கியம். பிளஸ் 2 முடித்த பின் தொழிற்சார்ந்த படிப்பு எடுத்தால், எதிர்காலம் சிறப்பாக இருக்கும்.
கேட்டரிங் என்றால் பின்னோக்குடன் பார்க்கின்றனர். பிளஸ் 2வில் எந்த பாடப்பிரிவு படித்திருந்தாலும் 50 சதவீத மதிப்பெண் இருந்தால் போதும். மரைன் கேட்ரிங் டெக்னலாஜியில் சேரலாம். கப்பலில் பணி என்பதால், படிப்பில் சேர வேண்டும் என்றால், மெடிக்கல் பிட்னஸ் பெற வேண்டும். 'கலர் பிளைன்ட்னஸ்' இருப்பவர்களால் கப்பல் சார்ந்த படிப்புகளை படிக்க முடியாது. டைரக்டர் ஜென்ரல் ஆப் ஷிப்பிங் பரிந்துரை செய்யும் டாக்டர்களிடம் மெடிக்கல் பிட்னஸ் பெற வேண்டும்.
இதில், உணவு தயாரிப்பு, உணவு வினியோகம், தங்கும் வசதிகள், வரவேற்பு என 4 பிரிவுகளும், கப்பலில் பாதுகாப்பாக பணியாற்ற வேண்டும் என கற்று தரப்படும். இதில் 80 சதவீதம் பயிற்சி அடிப்படையில் பாடம் இருக்கும். படிப்பு முடித்து கப்பலில் சேர பாஸ்போர்ட், எஸ்.டி.சி.டபிள்யூ மற்றும் சி.டி.சி., சான்றிதழ்கள் அவசியம். இந்த சான்றிதழ் பெற்று தரும் கல்லுாரிகளில் சேருங்கள். இவற்றுடன் கொஞ்சம் ஆங்கிலம் திறன் இருந்தால் 99.9 சதவீதம் வேலை நிச்சயம்.
பாடங்களை தேர்வு செய்வதற்கு முன்பு கல்லுாரியை நேரில் சென்று பார்த்து தேர்வு செய்ய வேண்டும். அங்கு நடத்தப்படும் பாடங்கள், வேலை வாய்ப்பு பெற்றவர்கள் விபரங்களை ஆய்வு செய்யுங்கள்.
கேட்ரிங் முடித்த மாணவர் ஒருவர் எவ்வித முன் அனுபவ பயிற்சி இன்றி கப்பலில் முதல் மாத சம்பளம் ரூ. 72 ஆயிரம் பெறுகிறார். 2 அல்லது 3 ஆண்டு பயிற்சி முடித்தால், மாதம் ரூ.2 லட்சம் வரை சம்பாதிப்பார். சீனியர்களுக்கு மாதம் ரூ. 5 லட்சம் வரை சம்பளம் கிடைக்கும். உலகம் முழுதும் உள்ள நாடுகளுக்கு செல்ல முடியும். கேட்டரிங் முடித்து 5 ஆண்டு கப்பலில் சம்பாதித்து, உள்ளூரில் வியாபாரம் செய்து கொள்ளலாம்.
கப்பலில் செல்ல விருப்பம் இல்லை என்றால், உலகம் முழுதும் ஓட்டல்களில் வேலை, விமானத்தில் விமான பணிப்பெண், மருத்துவமனை, சுற்றுலா துறை, ரயில்வே என ஏராளமான பணி வாய்ப்பு உள்ளது. கேட்டரிங் துறையில் படித்து கல்லுாரியில் இருந்து வெளியே செல்லும்போது, வேலையுடன் தான் செல்வர்.
இவ்வாறு அவர் பேசினார்.

