/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சைபர் கிரைம் போலீசாருக்கு ஐ.ஜி., பாராட்டு
/
சைபர் கிரைம் போலீசாருக்கு ஐ.ஜி., பாராட்டு
ADDED : மார் 01, 2025 04:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : புதுச்சேரியில் கிரிப்டோ கரன்சி மூலம் 10 நபர்களிடம் 3.6 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில், கோயம்புத்துாரைச் சேர்ந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.
இந்நிலையில், வழக்கை விசாரிக்கும் சீனியர் எஸ்.பி., நாரா சைதன்யா, எஸ்.பி., பாஸ்கரன், இன்ஸ்பெக்டர்கள் தியாகராஜன், கீர்த்தி, தலைமை காவலர் மணிமொழி, காவலர் பாலாஜி தலைமையிலான குழுவினரை ஐ.ஜி., அஜித்குமார் சிங்ளா அழைத்து பாராட்டினார். வழக்கில் தலைமறைவாக உள்ளவர்களை கைது செய்யவும், சொத்துக்களை முடக்கவும் ஆலோசனை வழங்கினார்.