/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
'மாநில நலனுக்கு எதிராக செயல்படும் காங்., - பா.ஜ.,வை புறக்கணியுங்கள்'
/
'மாநில நலனுக்கு எதிராக செயல்படும் காங்., - பா.ஜ.,வை புறக்கணியுங்கள்'
'மாநில நலனுக்கு எதிராக செயல்படும் காங்., - பா.ஜ.,வை புறக்கணியுங்கள்'
'மாநில நலனுக்கு எதிராக செயல்படும் காங்., - பா.ஜ.,வை புறக்கணியுங்கள்'
ADDED : ஏப் 03, 2024 02:50 AM

புதுச்சேரி : புதுச்சேரி லோக்சபா தேர்தலில் அ.தி.மு.க., வேட்பாளர் தமிழ்வேந்தனை ஆதரித்து, ராஜ்பவன் சட்டசபை தொகுதியில் அக்கட்சி மாநில செயலாளர் அன்பழகன் பேசியதாவது;
லோக்சபா தேர்தல் மகாபாரத போர். பாண்டவர்கள் போன்று அ.தி.மு.க. இருக்கிறது. கவுரவர்கள் போல் பா.ஜ., உள்ளது. முதல்வர் ரங்கசாமி பீஷ்மர் போல் செயல்படுகிறார்.
கெட்டவர்கள் என தெரிந்தும் பா.ஜ. வுக்கு முதல்வர் ஆதரவு அளிக்கிறார். தேர்தலுக்கு பின், பல எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்கி ஆட்சி மாற்றத்தை பா.ஜ., செய்யும். அப்போது முதல்வராக ரங்கசாமி இருக்க மாட்டார். இதனை உணர்ந்து என்.ஆர்.காங்., தொண்டர்கள் பா.ஜ.,வை புறக்கணிக்க வேண்டும்.
5 ஆண்டுகள் எம்.பி.யாக இருந்த வைத்திலிங்கம், புதுச்சேரிக்கு உருப்படியா ஒரு திட்டத்தை கூட கொண்டுவரவில்லை. மாநில அந்தஸ்து, மத்திய நிதி குழுவில் சேர்க்க போராடியதும் இல்லை.
ரெஸ்டோ பார்கள், கஞ்சா, போதை ஸ்டாம்ப் என விதவிதமான போதை பொருட்கள் விற்பனை கேந்திரமாக புதுச்சேரி மாற்றப்பட்டுள்ளது. போதை பொருட்களை தடுக்க உருப்படியான நடவடிக்கை இல்லை. சுற்றுலா என்ற பெயரில் கலாசார சீரழிவு நடக்கிறது.புதுச்சேரி மின்துறையை தனியாருக்கு தாரை வார்த்த அமைச்சர் நமச்சிவாயம், டில்லிக்கு அனுப்பினால் புதுச்சேரியில் அரசுக்கு சொந்தமான இன்னும் பல துறைகளை தனியாருக்கு விற்பனை செய்து விடுவார்.
புதுச்சேரி மாநில நலனுக்குஎதிராக செயல்படும் காங்., பா.ஜ., தேசிய கட்சி வேட்பாளர்களை புறக்கணித்து, மாநில நலனில் என்றும் அக்கறையுடன் செயல்படும் அ.தி.மு.க.வுக்கு ஓட்டு அளிக்க வேண்டும்' என்றார்.

