/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சிறுபான்மை மக்களை வஞ்சிக்கும் காங்., - பா.ஜ.,வை புறக்கணியுங்கள்
/
சிறுபான்மை மக்களை வஞ்சிக்கும் காங்., - பா.ஜ.,வை புறக்கணியுங்கள்
சிறுபான்மை மக்களை வஞ்சிக்கும் காங்., - பா.ஜ.,வை புறக்கணியுங்கள்
சிறுபான்மை மக்களை வஞ்சிக்கும் காங்., - பா.ஜ.,வை புறக்கணியுங்கள்
ADDED : ஏப் 06, 2024 05:34 AM

அ.தி.மு.க., அன்பழகன் பேச்சு
புதுச்சேரி: அ.தி.மு.க., வேட்பாளர் தமிழ்வேந்தனை ஆதரித்து, வில்லியனுார் தொகுதியில், அக்கட்சியின் மாநில செயலாளர் அன்பழகன் பேசியதாவது;
வில்லியனுார் தொகுதியில் பா.ஜ., வேட்பாளர் நமச்சிவாயம் பல முறை வென்றுள்ளார். கடந்த தேர்தலில் மண்ணாடிப்பட்டு தொகுதிக்கு சென்றார். தி.மு.க., எம்.எல்.ஏ., சிவா, உருளையன்பேட்டையில் 4 முறை வென்று, அங்கு மக்களை அனாதையாக விட்டுவிட்டு வில்லியனுாரில் உள்ள சிறுபான்மையின மக்களை ஏமாற்றி வெற்றி பெற்றார்.
கடந்த தேர்தலில் தி.மு.க., - பா.ஜ., கள்ள உறவு வைத்து கொண்டு இரு தொகுதிகளை மாற்றி நின்றனர். இந்த தேர்தல் முடிந்தவுடன் முதல்வர் மாற்றப்பட்டு, பா.ஜ., ஆட்சி அமையும். இதை என்.ஆர்.காங்., உண்மை தொண்டர்கள் உணர வேண்டும்.
6 எம்.எல்.ஏ.,க்கள் கொண்ட தி.மு.க., எதிர்கட்சியாக செயல்படாமல், அரசின் தவறுகளை தட்டி கேட்பதில்லை. நமச்சிவாயத்திற்கு நெருக்கமான செந்தில்குமார் கடந்த ஆண்டு போதை நபர்களால் வெட்டி கொல்லப்பட்டார். கொலைக்கான காரணம் இதுவரை வெளியிடப்படவில்லை.
வில்லியனுாரில் சிறுபான்மையின மக்கள் மூன்றாம் தர மக்களாக நடத்தப்படுகின்றனர். அவர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டு வருகிறது. வக்பு போர்டு இந்து அறநிலையத்துறையிடம் இருப்பதை தட்டி கேட்காத காங்., பா.ஜ., வேட்பாளர்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும்' என்றார்.

