/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
கங்கையம்மன் கோவிலில் சாகை வார்த்தல்
/
கங்கையம்மன் கோவிலில் சாகை வார்த்தல்
ADDED : மே 08, 2024 01:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அரியாங்குப்பம் : மணவெளியில் உள்ள கங்கையம்மன் கோவிலில், சித்திரை திருவிழாவை யொட்டி, சாகை வார்த்தல் நிகழ்ச்சி நடந்தது.
அரியாங்குப்பம் அடுத்த மணவெளியில் கங்கையம்மன் கோவில் உள்ளது. சித்திரை திருவிழாவையொட்டி, அம்மனுக்கு சாகை வார்த்தல், கும்பஞ்சோறு அளிக்கும் நிகழ்ச்சி நேற்று நடந்தது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக சபாநாயகர் செல்வம் பங்கேற்றார். அப்பகுதியில் இருந்து பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

