/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
தண்டு மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல்
/
தண்டு மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல்
ADDED : ஆக 11, 2024 05:02 AM
திருக்கனுார், : மணலிப்பட்டு தண்டு மாரியம்மன் கோவிலில், சாகை வார்த்தல் விழா நடந்தது.
திருக்கனுார் அடுத்த மணலிப்பட்டு காலனி யில் தண்டு மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது.
இக்கோவிலில், ஆடி மாதத்தையொட்டி, சாகை வார்த்தல் உற்ச வம் கடந்த 7ம் தேதி கொடியேற்றதுடன் துவங்கியது.
இதையொட்டி, அன்று காலை 7:30 மணிக்கு சங்கராபரணி ஆற்றங்கரைக்கு சென்று, 108 பால்குடங்கள் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு, தண்டு மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
முக்கிய நிகழ்வாக, நேற்று முன்தினம் காலை 10:00 மணிக்கு தண்டு மாரியம்மனுக்கு சிறப்பு அபிஷேகமும், மதியம் 1:00 மணிக்கு சாகை வார்த்தல் உற்சவம் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
ஏற்பாடுகளை விழாக்குழுவினர் ஆறுமுகம், கனகராஜ், மணி, செங்காலு, முத்து, விஜயன், சிங்காரவேலு மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

