/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் நுாதன பிரசாரம் 'பிடித்த கட்சிக்கு ஓட்டு போடுங்க' வெற்றிலை, பாக்கு வைத்து ஓட்டுவேட்டை

ADDED : ஏப் 11, 2024 04:03 AM

புதுச்சேரி:போடுங்கம்மா ஓட்டு யாரையாவது பார்த்து என புதுச்சேரி சுயேட்சை வேட்பாளரின் நுாதன பிரசாரம் நகர பகுதியை கலக்கி வருகிறது.
புதுச்சேரி லோக்சபா தேர்தலில் ஏழு அரசியல் கட்சி மற்றும் 19 சுயேச்சைகள் உள்பட மொத்தம் 26 பேர் களத்தில் உள்ளனர்.இதில் பலரும் பல்வேறு வகையில் பிரசாரம் செய்து ஓட்டு கேட்டு வரும் நிலையில், சுயேட்சை வேட்பாளராக போட்டியிடும் புதுச்சேரி சாரம் பகுதியை சேர்ந்த கோபி என்பவரின் மனைவி நிர்மலா,34, தனது தண்ணீர் தொட்டி சின்னத்திற்கு நுாதன முறையில் ஓட்டு கேட்கிறார்.
அவர் தனது ஆதரவாளர்களுடன் வீடு, வீடாக சென்று, வெற்றிலை பாக்கு, வாழைப்பழம், குங்குமம் வழங்கி உங்களுக்கு பிடித்த கட்சிக்கு ஓட்டு போடுங்க, எந்த கட்சியும் பிடிக்கவில்லை என்றால் எனது தண்ணீர் தொட்டி சின்னத்திற்கு ஓட்டு போடுங்கள் என கேட்கிறார்.
இதனை கேட்கும் வாக்காளர்கள் புரியாமல் நிற்கையில், புதுச்சேரியில் ஓட்டுப் பதிவு 80 சதவீதமாக உள்ளது.
இதனால் ஓட்டு போடுவதை மட்டும் தவிர்க்க வேண்டாம் நுாறு சதவீதம் ஓட்டு பதிவு கட்டாயம் தேவை என்ற விழிப்புணர்வை வலியுறுத்தி பேசுகிறார்.
சுயேட்சை வேட்பாளரின் பிரசாரம் பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது.