/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
புதுச்சேரியில் 3 மணி நேரத்தில் கொட்டி 15 செ.மீ., கனமழை ஓடையில் அடித்து சென்ற வாலிபரை தேடும் பணி தீவிரம்

ADDED : ஆக 11, 2024 07:31 AM

புதுச்சேரி : புதுச்சேரியில் மூன்று மணி நேரம் கொட்டி தீர்த்த கனமழையால் தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்தது. ஓடையை கடக்க முயன்ற வாலிபர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார்.
புதுச்சேரியில் கடந்த இரண்டு நாட்களாக இரவு நேரங்களில் கன மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு 9:30 மணி முதல் மூன்று மணி நேரம் கனமழை கொட்டி தீர்த்ததால் நகரப் பகுதி முழுவதும் வெள்ளக்காடாக காட்சியளித்தது.
சாலைகளில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழை நீர் வீடுகளுக்குள் புகுந்தது. ரெயின்போ நகர், கிருஷ்ணா நகர் பகுதியில் வீடுகளுக்கு மழை நீரும், கழிவு நீரும் புகுந்ததால் அப்பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகினர்.
கன மழை காரணமாக ஜீவானந்தபுரம் ஓடையில் மழைவெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது ஓடையை கடக்க முயன்ற மூன்று பேர் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர். இதில் இரண்டு பேரை பொதுமக்கள் மீட்டனர். ஓடையில் பைக்கினை எடுக்க சென்ற அய்யப்பன், 40; என்பவர் வெள்ளத்தில் இழுத்து செல்லப்பட்டார். தீயணைப்பு வீரர்கள், பொதுமக்கள் இரவு முழுதும் தேடியும் கிடைக்கவில்லை. நேற்று இரண்டாவது நாளாக அவரை தேடும் பணி நடந்தது.
கொக்குபார்க் சிக்னலில் மேம்பாலத்தில் அவர் மணலில் புதைந்து இருக்கலாம் என்று கருதிய போலீசார், முழுவதுமாக மணலை அள்ளினர். ஆனால் கிடைக்கவில்லை. இதேபோல் வெள்ளவாரி வாய்க்காலில் நிறுத்தப்பட்டு இருந்த ஆட்டோ, பைக்குகளும் அடித்து செல்லப்பட்டன. அவற்றை கணக்கெடுக்கும் பணி நடந்து வருகிறது.
புதுச்சேரியில் 9ம் தேதி காலை 8:30 மணி முதல் 10ம் தேதி காலை 8:30 மணி வரை 15.2 செ.மீ மழை பதிவாகி உள்ளது. கன மழை காரணமாக அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அளிக்கப்பட்டது. சிறப்பு வகுப்புகள் நடத்தவும் தடை விதிக்கப்பட்டது.