/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
இறந்த எஸ்.பி., நேரில் ஆஜராகி சாட்சி சி.பி.சி.ஐ.டி., குற்றப்பத்திரிக்கையில் இந்த கூத்து
/
இறந்த எஸ்.பி., நேரில் ஆஜராகி சாட்சி சி.பி.சி.ஐ.டி., குற்றப்பத்திரிக்கையில் இந்த கூத்து
இறந்த எஸ்.பி., நேரில் ஆஜராகி சாட்சி சி.பி.சி.ஐ.டி., குற்றப்பத்திரிக்கையில் இந்த கூத்து
இறந்த எஸ்.பி., நேரில் ஆஜராகி சாட்சி சி.பி.சி.ஐ.டி., குற்றப்பத்திரிக்கையில் இந்த கூத்து
ADDED : ஜூலை 30, 2024 04:54 AM
புதுச்சேரி: இறந்த போலீஸ் எஸ்.பி., நேரில் வந்து வாக்குமூலம் அளித்தாக சி.பி.சி.ஐ.டி., குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்துள்ள விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
புதுச்சேரியில் கடந்த 2004ம் ஆண்டு சப் இன்ஸ்பெக்டர் பணிக்கு தேர்வு நடந்தது. இதில் தலைமை காவலர் பாண்டியன் பங்கேற்றார்.
இவர் கடந்த 2020ம் ஆண்டு தகவல் உரிமை சட்டத்தின்படி பெற்ற ஆவணத்தின்படி, சப் இன்ஸ்பெக்டர் தேர்வில் முறைகேடு நடந்ததாக சென்னை மத்திய நிர்வாக தீப்பாயத்தில் தொடர்ந்த வழக்கு விசாரணையில் உள்ளது.
இந்நிலையில் தேர்வு மதிப்பெண்ணில் திருத்தம் செய்ததாக கடந்த 2021ம் ஆண்டு சி.பி.சி.ஐ.டி. போலீசார் பாண்டியன் மீது வழக்கு பதிந்து சஸ்பெண்ட் செய்தனர்.
இந்த வழக்கு தொடர்பாக குற்றபத்திரிக்கை புதுச்சேரி தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த பிப். 19ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. அதன் நகல் பாண்டியனுக்கு வழங்கப்பட்டது.
அதில், சாட்சியாக சேர்க்கப்பட்ட அப்போதைய எஸ்.பி., முனிசாமி, கடந்த 12.04.2023 உடல் நல குறைவால் இறந்நிலையில், 11.10.2023 அன்று சி.பி.சி.ஐ.டி., போலீஸ் ஸ்டேஷனில் நேரில் ஆஜராகி சாட்சி அளித்ததாகவும், இன்ஸ்பெக்டர் நியூட்டன், எழுத்தரான பெண் காவலர் உஷா அதை டைப் செய்ததாக கூறப்பட்டிருந்தது.
அதேபோல் கடந்தாண்டு ஆக., 28ம் தேதி இன்ஸ்பெக்டர் நியூட்டன், உணவு கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டார்.
ஆனால், அக்டோபர் 11ம் தேதி சி.பி.சி.ஐ.டி.,யில் வேலை செய்ததாக குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனை சுட்டிக் காட்டி சென்னை உயர்நீதி மன்றத்தில் பாண்டியன் வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி, பாண்டியன் மீதான வழக்கு விசாரணைக்கு இடைக் கால தடை விதித்தது.
பணியிடை நீக்கல் உத்தரவை எதிர்த்து பாண்டியன் தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த மத்திய நிர்வாக தீர்ப்பாயம், பாண்டியனுக்கு எதிராக பிறப்பித்த சஸ்பென்ட் உத்தரவு செல்லாது எனவும், உடனடியாக பணி வழங்கி நிலுவை சம்பள பாக்கியை 3 மாதங்களுக்குள் வழங்க உத்தரவிட்டுள்ளது.
இச்சம்பவம் புதுச்சேரி போலீஸ் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.