/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
அரசு பள்ளியில் கற்றல் மையம் திறப்பு
/
அரசு பள்ளியில் கற்றல் மையம் திறப்பு
ADDED : ஜூலை 31, 2024 04:09 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி : கருவடிகுப்பம் அரசு துவக்கப்பள்ளியில் உல்லாஸ் திட்டத்தின் மூலம் கற்றல் மையம் திறப்பு விழா நடந்தது.
புதுச்சேரி அரசு பள்ளி கல்வி இயக்கம் மற்றும் மாநில பயிற்சி மையம் மூலம் 15 வயதுக்குமேற்பட்ட கல்வியறிவு பெறாதவர்களுக்கு எழுத்தறிவு மற்றும் எண் அறிவு கற்பிக்கும் நோக்கில் மத்திய அரசு உல்லாஸ் எனும் புதிய திட்டத்தை செயல்படுத்தி உள்ளது.
அதன் ஒரு பகுதியாக கருவடிகுப்பம் அரசு துவக்கப்பள்ளியில் உல்லாஸ் திட்டத்தின் கற்றல் மையம் திறக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில், பள்ளி தலைமை ஆசிரியர் இளங்கோவன் முன்னிலை வகித்தார். ஆசிரியர்கள் சங்கீதா, அனிதா, பேராசிரியர் ராமராசா உட்பட ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.