/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
செயின்ட் ஜோசப் நைட்டி ஹவுஸ் திறப்பு விழா
/
செயின்ட் ஜோசப் நைட்டி ஹவுஸ் திறப்பு விழா
ADDED : செப் 16, 2024 06:57 AM

புதுச்சேரி: புதுச்சேரியில் செயின்ட் ஜோசப் நைட்டி ஹவுஸ் புதிய கிளை திறப்பு விழா நடந்தது.
புதுச்சேரி நேரு வீதியில் இயங்கி வரும் செயின்ட் ஜோசப் நைட்டி ஹவுஸ் பெண்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது. அதன் அருகில் புதிய கிளை திறப்பு விழா நேற்று நடந்தது.
விழாவில் நிர்வாக இயக்குனர் மர்சியால் வரவேற்றார். வில்லியனுார் புனித லுார்து அன்னை பள்ளி தலைமை ஆசிரியர் அருட்தந்தை ஆல்வின் அன்பரசு அடிகளார், வினோபா நகர் புனித சூசையப்பர் ஆலய பங்குதந்தை ஆரோக்கியதாஸ் அடிகளார், புதுச்சேரி துாய இருதய ஆண்டவர் பசிலிக்காவின் பங்குதந்தை பிச்சைமுத்து அடிகளார் ஆகியோர் புதிய கிளையை திறந்து வைத்து ஆசீர்வாதம் செய்தனர்.
திறப்பு விழாவில் நேரு வீதி வியாபாரிகள் சங்க நிர்வாக உறுப்பினர்கள், செயற்குழு உறுப்பினர்கள், வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
செயின்ட் ஜோசப் நைட்டி ஹவுஸ் உரிமையாளர் சரளா மர்சியால், ஜோசப் மர்சியால், சப்னா மர்சியால், அவினாஷ், சோபியா மர்சியால் ஆகியோர் நன்றி கூறினர்.

