ADDED : செப் 04, 2024 03:25 AM

புதுச்சேரி, : புதுச்சேரி அரசு குரூப் - பி மற்றும் சி ஊழியர் கூட்டுறவு சங்க சார்பில், பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற சங்க உறுப்பினர் பிள்ளைகளுக்கு ஊக்க தொகை வழங்கப்பட்டது.
புதுச்சேரி குரூப் - பி மற்றும் சி பிரிவு ஊழியர்கள் கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் சங்க உறுப்பினர்கள் பிள்ளைகளுக்கு எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ் 2 மற்றும் சி.பி.எஸ்.இ., பொதுத்தேர்வில் கடந்த 2020-21, 2021-22, 2022-23 ஆண்டுகளில் தேர்ச்சி பெற்ற மாணவர்களில் மதிப்பெண் அடிப்படையில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.
சங்க அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, சங்க தலைவர் விநாயகமூர்த்தி தலைமை தாங்கினார். செயலாளர் சாமிக்கண்ணு, இயக்குநர்கள் வெங்கடேசன், கோகிலவாணி, அன்பரசன் முன்னிலை வகித்தனர். முதலிடம் பிடித்த மாணவருக்கு ரூ. 5,000, 2ம் இடம் பிடித்த மாணவருக்கு ரூ. 3,000, மூன்றாம் இடம் பிடித்த மாணவருக்கு ரூ. 2,000 பரிசு வழங்கப்பட்டது.