/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
உள்ளாட்சி ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு
/
உள்ளாட்சி ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு
ADDED : ஏப் 25, 2024 03:33 AM
புதுச்சேரி: உள்ளாட்சித்துறை அமைப்பு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை 50 சதவீதமாக உயர்த்தி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 46 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக உயர்த்தி வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டது.
இதனை கடந்த ஜனவரி மாதம் முதல் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்நிலையில், புதுச்சேரி மாநில உள்ளாட்சித்துறை அமைப்புகளில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் அரசு ஊழியர்களைப் போன்று, அகவிலைப்படியை 46 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக உயர்த்தி வழங்க உத்தரவிட்டுள்ளது.
இந்த அகவிலைப்படி உயர்வு சுப்புராயபிள்ளை அறக்கட்டளையில் பணியாற்றும் ஊழியர்களுக்கும் பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான உத்தரவை அரசு சார்பு செயலர் ரத்னா வெளியிட்டுள்ளார்.

