/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
நாம் தமிழர் கட்சி ஓட்டு சதவீதம் அதிகரிப்பு
/
நாம் தமிழர் கட்சி ஓட்டு சதவீதம் அதிகரிப்பு
ADDED : ஜூன் 05, 2024 12:30 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுச்சேரி: நாம் தமிழர் கட்சியின் ஓட்டு சதவீதம் 2.01 சதவீதம் அதிகரித்துள்ளது.
நாம் தமிழர் கட்சி.கடந்த 2019 ம் ஆண்டு லோக்சபா தேர்தலில் 2.89 சதவீத ஓட்டுகளை பெற்றது.
இந்த தேர்தலிலும் நிச்சயம் மற்ற கட்சிகள் புருவத்தை உயர்த்தும் அளவிற்கு, இதுவரை இல்லாத வகையில் ஓட்டுகளை பெறுவோம் என இளைஞர்களை மையப்படுத்தி நாம் தமிழர் கட்சி தேர்தலில் ஒலிவாங்கியுடன்,பம்பரமாக சுழன்று வந்தது.
எதிர்பார்த்தபடியே 39,603 ஓட்டுகளை பெற்று 4.9 சதவீதத்துடன் மூன்றாம் இடம்பிடித்துள்ளது.
கடந்த லோக்சபா தேர்தலை ஒப்பிடும்போது இந்த தேர்தலில் நாம் தமிழர் கட்சியின் ஓட்டு 2.01 சதவீதம் அதிகரித்துள்ளது.