/
உள்ளூர் செய்திகள்
/
புதுச்சேரி
/
சுப்பிரமணிய பாரதி பள்ளியில் சுதந்திர தின விழா
/
சுப்பிரமணிய பாரதி பள்ளியில் சுதந்திர தின விழா
ADDED : ஆக 16, 2024 05:43 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திருக்கனுார்: திருக்கனுார் சுப்பிரமணிய பாரதி மேல்நிலைப் பள்ளியில் 78 வது சுதந்திர விழா நேற்று நடந்தது.
பள்ளி முதல்வர் டாக்டர் சம்பத் தலைமை தாங்கி, தேசிய கொடியை ஏற்றி வைத்தார்.
பின்னர், தேசத் தலைவர்களின் படங்களுக்கு மலர்துாவி மரியாதை செலுத்தப்பட்டது. விழாவையொட்டி, பள்ளி மாணவர்களின் கலை நிகழ்ச்சிகள் நடந்தன. சுதந்திர தினத்தை முன்னிட்டு பள்ளியில் பேச்சு, கட்டுரை மற்றும் ஓவிய போட்டிகள் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.
பள்ளியின் நிர்வாக இயக்குநர் டாக்டர் ஹரிஷ் குமார் நன்றி கூறினார்.

